Thursday, January 10, 2013
அமீரக AAMF–ன் மாதந்திர செயற்குழு கூட்டம்
Saturday, December 15, 2012
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒன்பதாவதுக் கூட்டம் !
1. கிராஅத் : இமாம் ஹாஜா முஹைதீன் அவர்கள்
2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப் M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.
3. A. முஹம்மது இப்ராஹீம் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் AAMF'ன் அவசியம் குறித்து பேசினார்கள்.
4. சென்றமாத AAMF'ன் எட்டாவதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
5. AAMF'ன் பொருளாளர் K.M. பரக்கத் அலி அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, துணை பொருளாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த மான் A. நெய்னா முஹம்மது அவர்கள் புதிய பொருளாளராக தொடர்ந்து செயல்படுவார் என அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
6. தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினரிடேயே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களிடேயே சுமூகத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இப்பிரச்சனை R.D.O. விசாரணையில் இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் ஒரு சாரார் தெரிவித்ததையடுத்து, நல்லதொரு தீர்வு விரைவாக நிறைவேற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன.
7. நமதூரில் சமிபத்தில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்து கீழத்தெரு மஹல்லா சார்பாக AAMF'க்கு வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் அனைவரிடத்திலும் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
9. இன்று [ 14-12-2012 ] வாகன விபத்தில் மரணம் அடைந்த சிறுவன் நசீமின் மறுமை வாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக என இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டன.
10. AAMF'ன் ஒன்பதாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர், டாக்டர் ஹனீப் ஆகியோர் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
Saturday, November 17, 2012
அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும். [வரஹ்]
இடம்: தலைவா் A.தமீம் ROOM
தேதி: 16-11-2012
அமீரக AAMF–ன் நவம்பா்-2012 மாத செயற்குழு கூட்டம் தலைவா் A.தமீம் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
அமா்வில் ஆலோசித்து எடுத்த தீா்மானங்கள் :
1) 2013- ஆண்டுக்கான நாள்காட்டி (Calender) அமீரக AAMF சார்பாக கடந்த வருடமும் அச்சிடுவது என முடிவானது. நாள்காட்டி அச்சிடுவதற்கன செலவினங்களை அனைத்து முஹல்லாவும் ஏற்றுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.
2) நமதுார் தரகா் தெரு முஹல்லா நிர்வாகத்தில் உள்ளவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, தரகா் தெரு முஹல்லா மக்களுல் ஒரு நல்லணக்கத்தை ஏற்படுத்த அதிரை AAMF துரித நடவடிக்கை எடுக்க அமீரக AAMF வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3) நமதுாரில் அருகில் உள்ள கிராமங்களின் பஞ்சாயத்தார்களை நமது அதிரை AAMF நிர்வாகிகள் சந்தித்து, நமது AAMF –பை அறிமுகம் செய்து, எதிர்காலத்தில் நமக்குல் நல்லிணக்கமான சூழ்னிலைகளை உருவாக்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்திறோம்.
Friday, October 26, 2012
துபாய் AAMF நோன்பு பெருநாள் சந்திப்பு (புகைப்படங்கள்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சந்திப்புக்கு வந்திருந்த பலர் குடும்பத்தினருடனும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் சிறப்பு.