இன்று ( 19-10-2012 ) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் உள்ள ரஹ்மான் மஸ்ஜிதில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் எட்டாவதுக் கூட்டத்திற்கு AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் சகோ. அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது, வழக்கறிஞர் அப்துல் முனாப் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.
1. கிராஅத் : சேக்தாவுது ஆலிம் அவர்கள்
2. வரவேற்புரை : ஹாஜி ஜனாப் M. M.S. சேக் நசுருதீன் அவர்கள்.
3. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் தனது சிறப்புரையில் 'கூட்டத்தின் ஒழுங்கீனம்பற்றி' குறிப்பிட்டு பேசினார்கள்.
4. சகோ. வாப்பு மரைக்காயர் அவர்கள் தனது அறிமுக உரையில் 'M.S.M. நகர் மற்றும் K.S.A. லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் உருவாகிய வரலாறு பற்றி குறிப்பிட்டு பேசினார்கள்.
5. நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக [ மவுத் ] குழி வெட்டுதலில் ஈடுபடும் சகோதரர்களுக்கு காலதாமதமில்லாமல் அவர்களுடைய ஊதியம் அவர்களுக்கு சென்றடையும் வகையில் கையிருப்பு தொகை இருப்பதின் அவசியம் எடுத்துப்பேசப்பட்டன. இதற்குரிய உதவிகளுக்கு முயற்சிக்கும்படி அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் தனது வேண்டுகோளாக வைத்தார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள்.
6. முதன் முதலாக AAMF'ன் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதம் நகர் மஹல்லாவாசியான மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை வரவேற்று அனைவரிடத்திலும் அறிமுகம் செய்துவைத்து அவர்களின் சமூகம் சார்ந்த எழுத்துப்பணிகள் பற்றி குறிப்பிட்டு பேசினார் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள்.
7. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் போன்றவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதற்காக குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் AAMF'ன் தலைமை நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், சேக்கனா M. நிஜாம் மற்றும் மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை நியமணம் செய்யப்பட்டுள்ளன.
8. AAMF'ன் பைலா அடுத்தக் கூட்டத்தில் இறுதிவடிவம் செய்யப்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
9. அனைத்து முஹல்லாவின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு திருமண பதிவேடு புத்தகத்தை அந்ததந்த மஹல்லாவிற்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனைவரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
10. முஹல்லா என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'மஹல்லா' என்ற சரியான வார்த்தையை அனைத்து தகவல் தொடர்புகளிலும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டன.
11. இதய சிகிச்சைக்காக சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு சகோ. இம்தியாஸ் மூலம் பெறப்பட்ட ரூபாய் 17,300/- AAMF'ன் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு, அவர் விரைவில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்ப இறைவனிடம் 'துஆ'ச்செய்ய அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
12. அரசின் சார்பாக ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நம்மைப்பற்றிய உடற்கூறு ரீதி ஆதாரங்கள் [ புகைப்படம், அங்க அடையாளங்கள் போன்றவை ] எடுக்கும் பணிகள் நமதூரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குரிய ஆவணங்களை அலுவலரிடம் சமர்பித்து தவறாது எடுத்துக்கொள்ளும்படி அனைவரிடமும் வேண்டுகோள் விடப்பட்டன.
13. AAMF'ன் எட்டாவது கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சகோதரர்கள் இப்ராகிம் அன்சாரி, அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீத், நாவலர் நூர் முஹம்மது ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14. நிகழ்ச்சிகள் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "புதுத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
No comments:
Post a Comment