This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Recent Posts

Thursday, September 27, 2012

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!

வாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

"ஆண்கள் கத்னா செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஏராளமாகும். இருந்தபோதிலும் அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது" என்று டாக்டர் ஆரான் தோபியான் கூறுகிறார்.

அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணிக்கை 1970 களில் 79 சதவீதமாக இருந்தது. 2010-ல் இந்த எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.

3 சீரற்ற(random) சோதனைகள் மூலமாக கத்னா செய்வது ஹெச்.ஐ.வி, ஆண்களுக்கு தோல் அழற்சி மற்றும் கருப்பை வாய்ப்புற்று நோய் மற்றும் ஆண்குறி புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெச்.பி.வி வைரஸ் ஆகியவற்றை குறைப்பது தெரியவந்துள்ளது என்று ஆரான் கூறுகிறார்.

கத்னா சதவீதம் அதிகரித்தால் ஹெச்.ஐ.வி பாதிக்கப்படுவதை குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


Sunday, September 23, 2012

IndianOil Sports Scholarship 2012-13

    IndianOil Sports awards Scholarships to promising young players with a view
    to encourage talent and create a pool of sportspersons from whom to select
    sport appointees to the Corporation.
     
     
    The last date for receipt of applications will be September 30th 2012
     
    Eligibility :Scholarship will be given to upcoming players in following
    games
     
    ATHLETICS
    BADMINTON
    BILLIARDS & SNOOKER
    CHESS
    CRICKET
    GOLF
    HOCKEY
    TABLE TENNIS
    TENNIS
    OTHER GAMES
     
    Age: between 14 to 19 years.
     
    Category: There will be two categories of scholarship: 'Elite Scholar' and
    'Scholar'
     
    Duration of sports scholarship shall be for a period of 3 years.
     
    APPLICATIONS
     
    The sportsperson should submit the application necessarily in the formats
    given on the website with all columns duly filled alongwith passport size
    photograph. It is mandatory to send a copy of the birth certificate. Photo
    copies of relevant press cuttings and the certificates, duly authenticated
    by their respective State Association or the Principal of their
    school/college may be submitted. Incomplete applications shall not be
    entertained.
     
    The last date for receipt of applications will be 30th Sept., 2012 and no
    applications will be entertained after the due date. The applicant
    necessarily should be above the age of 14 yrs. & below the age of 19 yrs as
    on 30th Sept., 2012.
      Application are to be sent to following address:

      D. V. PRASAD
      MANAGER (ADMN)
      INDIANOIL CORPORATION LTD.
      G-9, ALI YAVAR JUNG MARG,
      BANDRA (EAST),
      MUMBAI 400051
      Email - dprasad@indianoil.in
            Thanks to : 
            Afiya General Trading
           Adirampattinam, Mobile No :             +91-9500822092      
           Email Id : afiyageneraltrading@aaagroupsltd.com
           Web Site : www.aaagroupsltd.com

Friday, September 14, 2012

வெறுப்புக்கு என்ன காரணம்?

பாதையோரத்தில் ஒரு சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை ஓர் ஆள் கடந்து சென்றார். அவர்களைக் கடக்கும் பொழுது முறையாக ஸலாம் சொல்லிவிட்டே சென்றார் அவர். நின்றவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.

அவர் கொஞ்ச தூரம் கடந்து சென்றவுடன் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் சொன்னார்: "அந்த மனிதரைக் கண்டால் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது."

அங்கே கூடியிருந்தவர்கள் அவர் பேசியதை விரும்பவில்லை. "என்ன காரணம்?" என்று அவர்கள் எரிச்சலுடன் கேட்டனர். அவர் பதிலளிக்கும் முன்பே இன்னொரு ஆள் இவ்வாறு சொன்னார்: "அல்லாஹ் உண்மையானவன். இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அந்த ஆளிடம் சொல்லாமல் விடமாட்டேன்."

மற்றவர்களும் அதனை ஆதரித்தார்கள். இந்த உரையாடலை அறிந்த சம்பந்தப்பட்ட அந்த மனிதர் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்து புகார் அளித்தார்.

மக்களுக்கிடையில் தன்னைக் குறித்து இப்படிப் பேசியவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் அண்ணலாரிடம் கோரினார். "என்னை அவர் வெறுப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரிய வேண்டும்" என்று அவர் அண்ணலாரிடம் சொன்னார்.

அவர் மேல் தனக்கு வெறுப்பு இருக்கிறது என்று சொன்ன அந்த நபித்தோழரை அண்ணல் நபிகளார் அழைத்தார்கள். "அங்ஙனம் சொன்னீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கவர் "ஆமாம்" என்றார். "தங்கள் வெறுப்பிற்கு என்ன காரணம்?" என்று நபிகளார் கேட்டார்கள்.

அவர் சொன்னார்: "அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரின் அண்டை வீட்டுக்காரன். இவரை எனக்கு நன்கு தெரியும். கடமையான கூட்டுத் தொழுகைகளைத் தவிர அவர் தனியாகத் தொழுது நான் பார்த்ததேயில்லை."

குற்றஞ்சாட்டப்பட்ட மனிதர் சொன்னார்: "அண்ணலாரே! கடமையான தொழுகைகளை நான்  என்றைக்காவது தொழாமல் விட்டிருக்கின்றேனா, நேரம் தவறி நான் என்றைக்காவது தொழுதிருக்கின்றேனா என்று இவரிடம் கேட்க வேண்டும்."

அப்படி ஒன்றும் இல்லை என்றார் அவர். ஆனால் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்:

"அல்லாஹ்வின் தூதரே! நான் இவரின் அண்டை வீட்டுக்காரனல்லவா, ஆதலால் இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். கடமையான ஜக்காத்தை இவர் கொடுக்கிறார். ஆனால் ஒரு தடவை கூட அவர் ஓர் ஏழைக்கு உணவு கொடுப்பதையோ, உதவுவதையோ நான் பார்த்ததில்லை."

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீண்டும் தன் பதிலைத் தொடங்கினார் இவ்வாறு:

"அண்ணலாரே! ஜக்காத் கேட்டு வந்தவர்களை என்றைக்காவது நான் ஜக்காத் கொடுக்காமல் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியிருக்கின்றேனா என்று தாங்கள் இவரிடம் கேட்கவேண்டும்."

அப்படி ஒன்றும் இல்லை என்றார் அவர். ஆனால் மூன்றாவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர். அந்தக் குற்றச்சட்டு இதுதான்:

"அல்லாஹ்வின் தூதரே! ரமலான் மாதம் எல்லோரையும் போல இவரும் நோன்பு நோற்கிறார். ஆனால் ரமலானல்லாத காலங்களில் இவர் நோன்பு நோற்று நான் ஒருபோதும் கண்டதில்லை."

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மனிதர் கூறினார்: "அண்ணலாரே! நோயோ, பிரயாணமோ காரணமாக இல்லாமல் ரமலானில் நான் நோன்பு நோற்காமலிருந்ததை இவர் கண்டாரா என்று தாங்கள் கேட்கவேண்டும்."

இல்லை என்றார் குற்றச்சாட்டை வீசியவர்.

இறுதியில் இறுதித் தூதர் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வாறு இயம்பினார்கள்:

"தன் அண்டை வீட்டுக்காரர் தன்னை மாதிரியே வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தன் எதிர்பார்ப்புக்கேற்ப அவர் உயர வேண்டும் என்று விரும்பினார். இது நடக்காததால் அவருக்கு தன் அண்டை வீட்டுக்காரர் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்."

நன்றி

Thoothuonline


லிபியாவை நோக்கி அமெரிக்க போர்க் கப்பல்கள்!

வாஷிங்டன்:இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் அவமதித்து அமெரிக்கா வாழ் யூதனால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தால் முஸ்லிம் உலகில் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளது. லிபியாவில் கோபமடைந்த முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்திற்கு தீவைத்த சம்பவம் 2 தினங்கள் முன்னால் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் அமெரிக்க தூதர் உள்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொந்தளிப்பு அடங்காத லிபியாவை நோக்கி அமெரிக்க கடற்படையின் ஏவுகணைகளை ஏந்திய போர் கப்பல்கள் லிபியாவின் பெரிய நகரமான பெங்காசிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் கடற்படையின் ஒரு பிரிவும் அனுப்பப்பட்டுள்ளது.

லிபியாவில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந்நடவடிக்கை என்று ஒபாமா அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஐரோப்பா கடற்படை தளத்தில் இருந்து 50 உறுப்பினர்கள் அடங்கிய கடற்படை குழு ஒன்று லிபியாவுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். யு.எஸ்.எஸ் லபூன், யு.எஸ்.எஸ் மெக்ஃபால் ஆகிய போர்க்கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைந்துள்ளன. இந்த போர்க் கப்பல்களில் டெமொஹாக் ஏவுகணைகள் நிரம்பியுள்ளன. அமெரிக்க தூதரகத்தை தாக்கியவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒபாமா அரசு உத்தரவிட்டால் இந்த போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்படும் என கருதப்படுகிறது.

போர்க் கப்பல்கள் ஒவ்வொன்றிலும் 300 வீரர்கள் உள்ளனர். அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்புக்கு தேவையான ஆதரவை அளிக்குமாறு ஒபாமா உத்தரவிட்ட சில மணிநேரங்களிலேயே போர்க்கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார். போர்க் கப்பல்களை அனுப்பியதுக் குறித்து பதிலளிக்க பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் மறுத்துவிட்டார். ஆனால், அமெரிக்க படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியா மற்றும் எகிப்து அதிபர்களுடன் ஒபாமா தொலைபேசியில் பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதர் மற்றும் மூன்று அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மரணம் தொடர்பான விசாரணைக் குறித்தும் அவர் வினவினார்.

இதனிடையே லிபியாவின் பெங்காசி அமெரிக்க தூதரகத்தில் நடந்த தீவைப்புச் சம்பவத்தில் பலியான அமெரிக்க தூதர் ஸ்டீவன்ஸின் பாதுகாவலர் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ஸ்டீவன்ஸ் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது பற்றி உடல்கூறு ஆய்வறிக்கையில் தெரியவரும் கருதப்படுகிறது.


சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி-மத்திய அரசு அதிரடி

டெல்லி: கூட்டணிக் கட்சிகள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்று அதிரடியாக அனுமதி வழங்கியது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மேலும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. ஒற்றை பிராண்டை விற்கும் நிறுவனங்களில் மட்டும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டது.

இந் நிலையில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சரான பிறகு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுங்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சமையல் கேஸுக்கான மானியக் கட்டுப்பாடு ஆகியவற்றை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இன்று அடுத்த அதிரடி அறிவிப்பைச் செய்துள்ளது மத்திய அரசு.

இதையடுத்து பெரும் போராட்டங்களை நாடு சந்திக்கும் என்று தெரிகிறது.

சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் பொருளாதார சீரழிவு என்ற ஒரு பிரமாண்டமான சுனாமியைச் சந்தித்துத் தீர வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பு எச்சரித்திருந்தது நினைவுகூறத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில் வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை நம் ஊர் கடைகளை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மெட்ரோ நிறுவனம் தனது ஸ்டோர்களை இந்தியாவில் நடத்தி வந்தாலும் சில்லறை வணிகம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வணிகர்களுக்கு மட்டுமே (வர்த்தக வரி செலுத்துவோர்) பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இப்போதைய மத்திய அரசின் முடிவின் மூலம் மெட்ரோ ஸ்டோர்களில் பொது மக்களும் கூட பொருட்களை வாங்க முடியும்.

விமானத்துறையிலும் அன்னிய முதலீட்டு அனுமதி:

அதே போல இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும்.

இது திவால் நிலையில் உள்ள கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு பெரும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



Wednesday, September 12, 2012

இஸ்லாமை விமர்சித்து சினிமா: லிபியாவில் யுஎஸ் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்-அமெரிக்க தூதர் பலி


பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன.
நேற்று இரவு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். பலர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.
பெங்சாய் தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும் சூறையாடி, தீ வைத்தனர்.
இதில் தூதரகத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸை பாதுகாக்க அவரை ஊழியர்கள் ஒரு அறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த அறைக்குள் பரவிய கடும் புகை மூட்டத்தில் மூச்சு முட்டி அவர் இறந்தார். அவருடன் இருந்த 3 ஊழியர்களும் பலியாயினர்.
இந்தத் தாக்குதலில் மேலும் தூதரக ஊழியர்களுக்கு கை, கால்கள் உடைந்தன.
இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது.
வழக்கமாக தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள தூதரகத்தில் தான் இருப்பார். ஆனால், நேற்றிரவு பணி விஷயமாக பெங்சாய் தூதரகத்துக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
பலியானவர்களின் உடல்கள் இன்று ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு கொல்லப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் ஆதரவாளர்களான 'Islamic law supporters' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந் நிலையில் படத்தைத் தயாரித்த சாம் பேசிலி தலைமறைவாகிவிட்டார்.
எகிப்திலும்...
அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tuesday, September 11, 2012

அதிரை ஹஜ் பயணிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

2012 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் புனிதப் பயணிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடுத்தெருவில் உள்ள அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் இல்லத்தில் மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற உள்ளது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்தி இறைவனுக்குப் பொருத்தமான ஹஜ் பயணம் அமைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஆண்ட்ராய்ட் போனில் நுழைந்த அதிரை!


இதுவரை அதிரை.in மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் செய்திகளை மேசைக்கணினி, மடிக்கணினி மற்றும் செல்ஃபோன்  உலாவிகளில் www என்று தட்டச்சு செய்து சூடான செய்திகளை ஆறிப்போய் :) வாசித்தவர்களுக்கு வரப்பிரசாதமாக  அதிரை.in தளத்தில் மற்றும் AdiraiXpressஇல் வெளியாகும் செய்திகளை கூகில் நிறுவன அங்கீகாரத்துடன் ஆண்ட்ராய்ட் போன்களிலும் இனி  எளிதாக வாசிக்கலாம்.
சிற்றூர்களின் முதல் இணையதளம் என்ற அடையாளத்துடன் 1999 இல் தொடங்கப்பட்டwww.adirampattinam.com இன்  கடைக்குட்டியான www.adirai.in வடிவமைப்பாளர் சகோ.ரியாஸ் அஹமது இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்  படுத்தி தமிழிணையத்தில் வாசிக்கப்படும் தமிழ்சமூக வலைத்தளங்களுக்கான முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருள்  என்ற சிறப்பை நமதூருக்குத் தேடித்தந்துள்ளார்.
கூகில் PLAY STORE மென்பொருளை ஆண்ட்ராய் செல்பேசிகளில் நிறுவி Adirampattinam என்று தேடினால் கிடைக்கும் Adirai மூலம் http://www.adirai.in, http://adiraixpress.blogspot.com மற்றும் நமதூரின் ஏனைய வலைத்தளங்களிலும் வெளியாகும் பல  ஆக்கங்களை அதிவேகமாக வாசிக்கலாம். நேரடியாக இணையத்தில் இத்தளங்களை அணுகுவதைவிட குறைவான  Data மட்டுமே செலவாகும் என்பதால் கணிசமான செல்ஃபோன் இணையக் கட்டணம் குறைவவதோடு, இணையம்  இணைப்பில்லா சூழலில் Offline இலும் வாசிக்கலாம்.
அதிரையின் அனைத்து வலைத்தளங்களையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் வாசிக்கும் உன்னத முயற்சியின்  முதற்கட்டமாக இந்த apps விளங்கும் என்பதால், இதனை ஆண்ட்ராய்ட் செல்பேசியில் நிறுவியும், கூகிலில் ***** முத்திரை வழங்கியும் ஊக்குவிப்பதன்மூலம் இன்ஷா அல்லாஹ் அதிரை நிகழ்வுகளை உங்கள் உள்ளங்கைக்குள்  கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
கூகில் Playstore மூலம் இந்த மென்பொருளை நிறுவமுடியாதவர்கள் www.adirai.in இல் இருந்தும் தரவிறக்கம் செய்து  நிறுவிக்கொள்ளலாம். info@adirai.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இணைப்பாகப் பெற்றுக்கொண்டு நிறுவலாம். இந்த மென்பொருளின் பயன்பாடுகள்/செயல்பாடுகள் குறித்த உங்கள் கருத்துகளையும் ஐயங்களையும் info@adirai.in  என்ற முகவரிக்கு மடலிட்டும் அறிந்துகொள்ளலாம். இந்த மென்பொருளுக்கான வரவேற்பைப் பொருத்து இன்ஷா  அல்லாஹ். அடுத்தடுத்த முயற்சியாக "அதிரை அவசர தொலைபேசிஎண்கள்", "அதிரை சந்தை நிலவரம்" போன்ற  பயனுள்ள மென்பொருட்கள் அண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் செல்ஃபோன் பயனர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்படும்.