இதுவரை அதிரை.in மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் செய்திகளை மேசைக்கணினி, மடிக்கணினி மற்றும் செல்ஃபோன் உலாவிகளில் www என்று தட்டச்சு செய்து சூடான செய்திகளை ஆறிப்போய் :) வாசித்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அதிரை.in தளத்தில் மற்றும் AdiraiXpressஇல் வெளியாகும் செய்திகளை கூகில் நிறுவன அங்கீகாரத்துடன் ஆண்ட்ராய்ட் போன்களிலும் இனி எளிதாக வாசிக்கலாம்.
சிற்றூர்களின் முதல் இணையதளம் என்ற அடையாளத்துடன் 1999 இல் தொடங்கப்பட்டwww.adirampattinam.com இன் கடைக்குட்டியான www.adirai.in வடிவமைப்பாளர் சகோ.ரியாஸ் அஹமது இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல் படுத்தி தமிழிணையத்தில் வாசிக்கப்படும் தமிழ்சமூக வலைத்தளங்களுக்கான முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருள் என்ற சிறப்பை நமதூருக்குத் தேடித்தந்துள்ளார்.
கூகில் PLAY STORE மென்பொருளை ஆண்ட்ராய் செல்பேசிகளில் நிறுவி Adirampattinam என்று தேடினால் கிடைக்கும் Adirai மூலம் http://www.adirai.in, http://adiraixpress.blogspot.com மற்றும் நமதூரின் ஏனைய வலைத்தளங்களிலும் வெளியாகும் பல ஆக்கங்களை அதிவேகமாக வாசிக்கலாம். நேரடியாக இணையத்தில் இத்தளங்களை அணுகுவதைவிட குறைவான Data மட்டுமே செலவாகும் என்பதால் கணிசமான செல்ஃபோன் இணையக் கட்டணம் குறைவவதோடு, இணையம் இணைப்பில்லா சூழலில் Offline இலும் வாசிக்கலாம்.
அதிரையின் அனைத்து வலைத்தளங்களையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் வாசிக்கும் உன்னத முயற்சியின் முதற்கட்டமாக இந்த apps விளங்கும் என்பதால், இதனை ஆண்ட்ராய்ட் செல்பேசியில் நிறுவியும், கூகிலில் ***** முத்திரை வழங்கியும் ஊக்குவிப்பதன்மூலம் இன்ஷா அல்லாஹ் அதிரை நிகழ்வுகளை உங்கள் உள்ளங்கைக்குள் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
கூகில் Playstore மூலம் இந்த மென்பொருளை நிறுவமுடியாதவர்கள் www.adirai.in இல் இருந்தும் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். info@adirai.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இணைப்பாகப் பெற்றுக்கொண்டு நிறுவலாம். இந்த மென்பொருளின் பயன்பாடுகள்/செயல்பாடுகள் குறித்த உங்கள் கருத்துகளையும் ஐயங்களையும் info@adirai.in என்ற முகவரிக்கு மடலிட்டும் அறிந்துகொள்ளலாம். இந்த மென்பொருளுக்கான வரவேற்பைப் பொருத்து இன்ஷா அல்லாஹ். அடுத்தடுத்த முயற்சியாக "அதிரை அவசர தொலைபேசிஎண்கள்", "அதிரை சந்தை நிலவரம்" போன்ற பயனுள்ள மென்பொருட்கள் அண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் செல்ஃபோன் பயனர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்படும்.
No comments:
Post a Comment